விமானத்திற்குள் வைத்து கைது செய்யப்பட்ட இளைஞன்! வெளியாகிய காரணம்
நீதிமன்ற பிடியாணை
கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்றையதினம் டுபாய் செல்லத் தயாராக இருந்த விமானத்திற்குள் நுழைந்த குற்ற தடுப்பு காவல்துறையினர் இளைஞர் ஒருவரை கைது செய்திருந்தனர்.
வலுக்கட்டாயமான முறையில் கைது செய்யப்பட்டதாக விமானத்திற்குள் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டதுடன், பலரும் அதற்கு எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையில் குறித்த நபரை அதிரடியாக கைது செய்யப்பட்டமைக்கான காரணத்தை காவல்துறையினர் தெளிவுபடுத்தியுள்ளனர்.
காலிமுகத்திடலில் கோட்டாகோகம போராட்டத்தில் ஈடுபட்டிருந்த குருணாகல் பகுதியை சேர்ந்த 31 வயதான தானிஷ் அலி என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் கடந்த 13ஆம் திகதி தேசிய தொலைக்காட்சியான ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தில் அத்துமீறி நுழைந்து குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தார். அவருக்கு எதிராக கொழும்பு நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் அவரைக் கைது செய்ய காவல்துறையினர் தேடிக் கொண்டிருந்த நிலையில் தானிஷ் அலி தன் தோற்றத்தை மாற்றிக் கொண்டு வௌிநாட்டுக்குச் செல்லப் புறப்பட்டுள்ளாா்.
இந்நிலையைலேயே விமானத்துக்குள் வைத்து அவரைக் கைது செய்ய நேர்ந்துள்ளது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது காலை நேர முக்கிய செய்திகளுடன் இணைந்திருங்கள்,
