பசிலுக்கு பிடியாணை! கைதுக்கு காவல்துறையினர் குழு அமெரிக்கா பறக்கும்?
சிறிலங்கா காவற்துறை கைவிலங்குகளுடன் அமெரிக்கா பறக்கவேண்டிவருமா? அல்லது அதற்கு வேலை வைக்காமல் ராஜபக்சக்களில் 7 மூளை கொண்டவர் என விளிக்கபடும் பசில் ராஜபக்ச தானாக இலங்கைக்கு திரும்புவரா? என்ற வினாக்கள் எழுந்துள்ளன.
பசில் ராஜபக்சவை கைது செய்யுமாறு மாத்தறை நீதிமன்றம் இன்று ஒரு பிடியாணையை பிறப்பித்ததால் பசிலின் விதியில் ஒரு முக்கிய விளையாட்டு ஆரம்பித்துள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டு செம்ரெம்பர் 20 ஆந்திகதி அதிகாலை 3 மணிக்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸில் ஏறி டுபாய் ஊடாக அமெரிக்காவுக்கு பறந்த பசில் பறந்ததுதான்.
கிட்டத்தட்ட ஒன்றைரைவருடத்துக்கும் மேலாக அவர் இலங்கை திரும்பாமல் நீதிமன்றங்களுக்கு கடுக்காய் கொடுத்த நிலையில் மாத்தறை உள்ள பிறவுன் ஹில் என்ற மண்ணிற மலைப்பகுதியில் 1.5 ஏக்கர் காணியை பினாமி பெயரில் வாங்கிய விடயம் இந்த பிடியாணையை பிறப்பித்துள்ளது.
இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்ததால் ஆசியாவின் மிக மோசமான நாணயம் இலங்கை ரூபாதான் என்பது புளூம்பேர்க் உட்பட்ட அனைத்துலக நிதி நிறுவனங்களின் கணிப்பாக வந்துவிட்டதால் அனுரஆட்சியால் நிலைமை மேலும் மோசமடைய முன்னர், அவசர தீர்வுகளுக்காக அனைத்துக் கட்சி மாநாட்டை உடனடியாகக் கூட்டுமாறு சஜித் அலறிய நிலையிலும் இந்த பிடியாணை செய்திவந்துள்ளமை இருகோடுகள் தத்துவத்தை நினைவுட்டும் நிலையில் இந்தவிடயங்களை தொட்டுவருகிறது செய்திவீச்சு...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |