காலிமுகத்திடல் செயற்பாட்டாளர் இருவருக்கு பிடியாணை
Sri Lanka Police
Galle Face Protest
Sri Lanka Magistrate Court
By Sumithiran
கோட்டை நீதவான் பிறப்பித்த பிடியாணை
சட்டவிரோதமான முறையில் மக்கள் ஒன்றுகூடல் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, வீரசேகர மற்றும் சுகதானந்த தேரர் ஆகியோர் நீதிமன்றில் முன்னிலையாகவில்லை.
காவல்துறையினர் விடுத்த கோரிக்கை
இதனையடுத்து, இருவரையும் கைது செய்ய பிடியாணை பிறப்பிக்குமாறு காவல்துறையினர் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்தே நீதிமன்றம் மேற்கண்ட பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதேவேளை ஏற்கனவே காலிமுகத்திடல் செயற்பாட்டாளர்களில் பலர் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
