தவராசாவின் அனல் பறந்தவாதம் : கைதான பிரித்தானிய தமிழ் பிரஜை விடுதலை

Tamils Sri Lanka Magistrate Court United Kingdom K.V.Thavarasha
By Jaso Dec 17, 2024 08:18 PM GMT
Report

பிரித்தானியாவிலிருந்து (uk) விடுதலை புலிகள் அமைப்பை மீள உருவாக்குவதற்காக பணம் வசூலித்து அனுப்பியதாக தெரிவித்து கைது செய்யப்பட்ட பிரித்தானிய பிரஜையான தமிழர், ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராசாவின் வாதத்தை அடுத்து இன்று (17) கொழும்பு நீதிமன்றால் விடுதலை செய்யப்பட்டார்.

உலகத்தமிழ் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் மற்றும் உலகத்தமிழர் பேரவையின் நிர்வாகிகளுடன் இணைந்து பிரித்தானிய பிரஜையான இலங்கைத் தமிழர், விடுதலை புலிகளின் மீள் உருவாக்கத்திற்காக நிதி திரட்டி இலங்கைக்கு அனுப்பியதாக 2012 ஆம் ஆண்டு குற்றப்புலனாய்வு பிரிவினரால் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதுடன் அவருக்கெதிராக பயணத்தடையும் விதிக்கப்பட்டிருந்தது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

குறித்த பிரித்தானிய பிரஜை தனது தாயாரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக கடந்த நவம்பர் மாதம் 30 ஆம் திகதி இலங்கை வருகை தந்தபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்ற புலனாய்வுப்பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

தவராசாவின் அனல் பறந்தவாதம் : கைதான பிரித்தானிய தமிழ் பிரஜை விடுதலை | Arrested British Tamil Citizen Released

இந்த வழக்கு இன்று கொழும்பு நீதவான் மன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது சந்தேக நபர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராசா தனது வாதத்தில் இந்த சந்தேக நபர் சட்டரீதியற்ற வகையில் கைது செய்யப்பட்டார் என்றும் 2009 ஆண்டு யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னர் பல நூற்றுக்கணக்கான அப்பாவிகள் கைது செய்யப்பட்ட பொழுது இந்த சந்தேக நபரும் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு இவர் மீது எந்தக் குற்றச்சாட்டும் சுமத்த முடியாத நிலையில் விடுதலை செய்யப்பட்டார்.அதன் பின்னர் 2010 ஆம் ஆண்டு பிரித்தானியாவுக்கு பயணமாகிய பின்னர் பிரித்தானிய பிரஜாவுரிமையும் பெற்றுக்கொண்டார்.

ரஷ்ய தலைநகரில் குண்டுவெடிப்பு : உயர்மட்ட இராணுவ தளபதி பலி

ரஷ்ய தலைநகரில் குண்டுவெடிப்பு : உயர்மட்ட இராணுவ தளபதி பலி

சந்தேக நபர் எந்த குற்றத்தை புரிந்தார்

காவல்துறையினர் 2012 இல் சந்தேக நபருக்கு எதிராக நிதி சேகரித்ததாக நீதிமன்றில் அறிக்கையை தாக்கல் செய்து விசாரணை செய்த போதிலும் 2024 ஆம் ஆண்டு கைது செயப்படும்வரை இவருக்கெதிராக காவல்துறை விசாரணையில் நீதிமன்றில் எவ்வித சான்றுகளும் முன்வைக்கப்படவில்லை என்பதோடு சந்தேக நபர் எந்த குற்றத்தை புரிந்தார் என்பதை காவல்துறையினர் நீதிமன்றில் தாக்கல் செய்த அறிக்கைகளில் தெளிவாக குறிப்பிடவில்லை.

தவராசாவின் அனல் பறந்தவாதம் : கைதான பிரித்தானிய தமிழ் பிரஜை விடுதலை | Arrested British Tamil Citizen Released

புலம்பெயர் தமிழர்களின் வெளிநாட்டு முதலீடுகள் பாதிக்கும்

2010 ஆம் ஆண்டிலிருந்து 2024ஆம் ஆண்டு கைது செய்யப்படும் வரை சந்தேக நபர் இலங்கைக்கு எந்த விஜயமும் மேற்கொண்டிருக்கவில்லை என்பதை நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டு வந்ததுடன் மேலும் தனது வாதத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா இவ்வாறான சட்டரீதியற்ற கைதுகளினால் புலம்பெயர் தமிழர்களின் வெளிநாட்டு முதலீடுகள் குறைவடைவதுடன் சுற்றுலாத்துறையிலும் பாரிய பாதிப்புகள் ஏற்படுவதுடன் இது இலங்கை பொருளாதாரத்தில் வீழ்ச்சியையும் ஏற்படுத்தும், என்பதனையும் நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.

தவராசாவின் அனல் பறந்தவாதம் : கைதான பிரித்தானிய தமிழ் பிரஜை விடுதலை | Arrested British Tamil Citizen Released

கடந்த 06 ஆம் திகதி குற்றப்புலனாய்வு காவல்துறையினரால் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் பிரித்தானிய பிரஜையினால் நிதி அனுப்பப்பட்டதாக கைது செய்யப்பட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் விசாரணையில் தனது பெற்றோருக்கே நிதி அனுப்பியதாக தெரியவந்துள்ளது பெற்றோருக்கு நிதி அனுப்புவது குற்றமா என்ற வாதத்தையும் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா நீதிமன்றில் முன்வைத்ததை அடுத்து கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி சந்தேக நபரை விடுதலை செய்தார். 

இந்திய கடற்றொழிலாளர்கள் விவகாரம்: ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி கடிதம்

இந்திய கடற்றொழிலாளர்கள் விவகாரம்: ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி கடிதம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

you may like this


ReeCha
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உரும்பிராய்

10 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, London, United Kingdom, Devon, United Kingdom

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023