ஜனக்க ரத்நாயக்கவுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்து கப்பம் கோரிய சந்தேக நபர் கைது
இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக்க ரத்நாயக்கவுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்து 15 லட்சம் ரூபாய் கப்பம் கோரிய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய தினம் (11) கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் வெல்லம்பிட்டிய பகுதியில் வைத்து அவர் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் மீட்பு
கைது செய்யப்பட்டவர் மாத்தறைப் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என குறிப்பிடப்படுகிறது.
அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து 12.24 கிராம் நிறையுடைய ஐஸ் ரக போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக்க ரத்நாயக்க, கடந்த ஒக்டோபர் 16ஆம் திகதி தம்மை அச்சுறுத்தி 15 இலட்சம் ரூபாய் பணம் பெற்றதாக கிருலப்பனை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.