சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்படவிருந்த சுமார் 5.5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவரை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்யதுள்ளனர்.
அதன்படி, இந்த கைது நடவடிக்கை இன்று (31.03.2026) காலை இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
35,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் மீட்பு
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளார்.
அதன்போதே, சந்தேக நபரின் பயணப் பையிலிருந்து 35,000 வெளிநாட்டு சிகரெட்டுகள், 2,000 நிக்கோட்டின் இரசாயனம் கொண்ட சிறிய பொதிகள் மற்றும் 50 மின்னணு சிகரெட்டுகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில் கைத செய்யப்பட்ட சந்தேகநபர் காலி பகுதியில் வசிக்கும் 23 வயது தொழிலதிபர் என காவல்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
you may like this
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
3 நாட்கள் முன்