இந்திய கடற்பரப்பில் கைதான இலங்கை கடற்றொழிலாளர்கள்: 5 மாதங்களுக்கு பின் விடுதலை
சீரற்ற காலநிலை காரணமாக இந்திய எல்லைக்குள் சென்று இந்திய கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்ட இலங்கை கடற்றொழிலாளர்கள் 5 மாதங்களுக்கு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்ட அலுவலகத்தில் இன்றைய
தினம் (8) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் (E.P.D.P.) மன்னார் மாவட்ட நிர்வாக செயலாளரும் மாவட்ட இணைப்பாளருமான சுப்பையா சந்துரு இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “மன்னார் -தலைமன்னார் பகுதியை சேர்ந்த கடற்றொழிலாளர்கள் 2023 ஆம் ஆண்டு 11 மாதம் இந்திய கடலோர காவல் படையினரால் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தனர்.
இயற்கை அனர்த்தங்கள்
இவர்கள் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக இந்திய சிறைகளில் வாடி இருந்தார்கள் அவர்களை விடுவிக்க கோரி அவர்களுடைய குடும்பத்தினர் எமது கட்சியை நாடி இருந்தார்கள்.
நாங்கள் அவர்களுடைய கோரிக்கையை ஏற்று அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வந்ததை அடுத்து அமைச்சர் மேற்கொண்ட முயற்சியின் பயனாக கடந்த செவ்வாய் கிழமை அனைத்து கடற்றொழிலாளர்களும் நாடு திரும்பினர்.
அதே போல் இயற்கை அனர்த்தங்களால் ஏற்படும் விளைவுகள் காரணமாக இந்திய எல்லையை சென்றடைந்து இந்திய கரையோர காவல் படையினரால் கைது செய்யப்படும் கடற்றொழிலாளர்கள் பல காலங்கள் சிறையில் வாடும் நிலை காணப்பட்டது.
[XJGVON0 ]
மன்னார் அலுவலகம்
ஆனால் இனிமேல் அவ்வாறான பிரச்சினைகள் காணப்படும் பட்சத்தில் எங்கள் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டால் நாங்கள் நிச்சயம் அமைச்சரை தொடர்பு கொண்டு அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்போம் என மாவட்ட இணைப்பாளருமான சுப்பையா சந்துரு தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.. |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 3 நாட்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்