ஹங்வெல்லயில் திரையரங்கில் பதுக்கப்பட்ட ஆயுதங்களுடன் சந்தேக நபர் கைது
கம்பஹா மாவட்டம், கிரிந்திவெல, ஹங்வெல்ல பகுதியில் அமைந்துள்ள திரையரங்கு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள், தோட்டாக்கள், கைக்குண்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்க கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையிலேயே நேற்று (17) மாலை இக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
குறித்த திரையரங்கினுள் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 2 பிஸ்டல் ரக துப்பாக்கிகள், ஒரு ரிவால்வர் துப்பாக்கி, ஒரு ரிப்பீட்டர் துப்பாக்கி, ஒரு போர் 12 துப்பாக்கி, போர் 12 ரக தோட்டாக்கள் 398, போர் 16 ரக தோட்டாக்கள் 278, பொயிண்ட் 32 துப்பாக்கிக்குப் பயன்படுத்தப்படும் 3,083 தோட்டாக்கள் மற்றும் 2 கைக் குண்டுகள் ஆகியவை காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
38 வயது நபர்
இச் சம்பவத்துடன் தொடர்புடையவராக சந்தேகிக்கப்படும் மில்லத்தே பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |