மன்னாரில் இளம் தாயின் மரணத்திற்கு நீதி கோரி போராட்டம்: கைது நடவடிக்கையில் காவல்துறையினர்
மன்னார் பொது வைத்தியசாலையில் இறந்த இளம் தாயின் மரணத்திற்கு நீதி கோரி இடம் பெற்ற மக்கள் போராட்டத்தில் பொது சொத்துக்களை சேதப்படுத்தி வன்முறையை தூண்டும் விதமாக செயற்பட்ட நபர்களை கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த போராட்டமானது, நேற்றைய தினம் புதன்கிழமை (20) மாலை இடம்பெற்றது.
மன்னார் (Mannar) பட்டித்தோட்டம் பகுதியை சேர்ந்த 28 வயதான வனஜா என்ற திருமணமாகி 10 வருடங்களே ஆன இளம் தாய் கடந்த (19) செவ்வாய்கிழமை மன்னார் வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
கைது செய்ய நடவடிக்கை
பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட தாயும் சேயும் மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன்பாக நேற்றைய தினம் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதன் போது குறிப்பாக வைத்தியசாலைக்குள் நுழைந்து கண்ணாடிகளை சேதமாக்கியவர்கள், காவல்தறையினர் மீது கற்கள் வீசியவர்கள், டயர்கள் உள்ளிட்ட பொருட்களை வீதிகளில் எரித்து மக்களின் போராட்டத்தை திசை திருப்பியவர் களை கைது செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
வைத்தியசாலை சிசிரிவி கேமரா மற்றும் போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட காணொளிகளை சேகரித்து அதன் ஊடாக அமைதியான போராட்டத்தை திசை திருப்பி வன்முறை ஆக்கியவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களை கைது செய்ய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை, மன்னார் பொது வைத்தியசாலையில் தாய், சேய் உயிரிழந்தமை தொடர்பில் பகிரங்கமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென வன்னி மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் சுகாதார அமைச்சருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |