ரணிலின் வருகையால் - பரபரப்பில் சஜித் அணி
ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றம் வருகை தரவுள்ள நிலையில் சஜித் அணியில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.
இதன்படி ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களுக்கு இடையிலான மற்றுமொரு சந்திப்பு வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது.
கொரோனா தொற்றுககுள்ளான எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ 21ஆம் திகதிக்கு முன்னதாக மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்கால அரசியல் நடவடிக்கை குறித்து இந்த சந்திப்பின்போது பேசப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. கடந்த திங்கட்கிழமை கட்சியின் முதலாவது குழு சந்திப்பு நடந்ததில், அதில் கட்சி மற்றும் எதிர்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாஸவையே தொடர்ந்தும் சார்ந்திருப்போம் என்ற தீர்மானத்திற்கு கட்சி உறுப்பினர்கள் வந்திருந்தனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க மீண்டும் நாடாளுமன்றத்திற்கு அடுத்துவரும் அமர்வில் கலந்துகொள்ளவிருக்கின்றார்.
இதன் காரணமாக ஐக்கிய மக்கள் சக்தியினுள் அதிர்வலை ஏற்பட்டுள்ள நிலையிலேயே இந்த தீர்மானமும் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.