கனடா அரசின் உதவியுடன் இலங்கையில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டம்
By Kathirpriya
இலங்கையில் உள்ள மகப்பேறு மற்றும் சிறுவர் சிகிச்சை நிலையங்களில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குடும்ப நல சுகாதார பணியகத்தினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாய் மற்றும் குழந்தைக்கு
இதற்கான தரவு சேகரிப்பு பணிகளின் முதற்கட்டம் அடுத்தமாதமளவில் ஆரம்பிக்கப்படுமென குடும்பநல சுகாதார நிபுணர் கபில ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
கனேடிய அரசாங்கம், பல்வேறு முகவர் நிலையங்கள் மற்றும் சர்வதேச மையத்தின் உதவி மற்றும் மேற்பார்வையின் கீழ் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி கரு, தாய் மற்றும் குழந்தைக்கு ஏற்படும் சிக்கல்களை வைத்தியர்களினால் எதிர்காலத்தில் கணிக்க முடியுமென குடும்பநல சுகாதார நிபுணர் கபில ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்