ஒருங்கிணைப்பு குழுக்களின் தலைவராக அருண் ஹேமச்சந்திரா நியமனம்
Batticaloa
Trincomalee
Sri Lanka
By Sathangani
திருகோணமலை (Trincomalee) மற்றும் மட்டக்களப்பு (Batticaloa) மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்களின் தலைவராக அருண் ஹேமச்சந்திரா (Arun Hemachandra) நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சராக அருண் ஹேமச்சந்திர அண்மையில் நியமிக்கப்பட்டிருந்தார்.
கடந்த 21.11.2024 அன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) முன்னிலையில் இவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு
இதேவேளை நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் இருந்து அருண் ஹேமச்சந்திர போட்டியிட்டார்.
இந்த நிலையில் 38,368 வாக்குகளைப் பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி