பிரான்சில் புதிய நடைமுறை பயன்பாட்டிற்கு வருகிறது
பிரான்சில் கொரோனா தொற்றுப் பரவல் தீவிரமடைந்துவரும் நிலையில், புதிய கொவிட் சுகாதார சான்றிதழ் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
பெரும்பாலான அருங்காட்சியகங்கள் மற்றும் திரையரங்குகளுக்குள் பிரவேசிக்க வேண்டுமாயின் இந்த சான்றிதழை வைத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி பெற்றுக்கொண்டமை அல்லது தொற்று ஏற்படவில்லை என்பதை உறுதிப்படுத்தல் அல்லது அண்மையில் தொற்றில் இருந்து மீண்டமைக்கான சான்றிதலை வைத்திருப்போர் மாத்திரமே பெரும்பாலான அருங்காட்சியங்கள் மற்றும் திரையரங்குகளுக்குள் பிரவேசிக்க முடியும் என்ற நடைமுறை பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
இதேவேளை, பிரான்சில் கடந்த 24 மணித்தியாலங்களில் புதிததாக கொரோனா தொற்றினால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக சுகாதார அமைச்சர் ஒலிவியர் வோகோன் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
