பயணக் கட்டுப்பாடுகளை நீடிக்கும் முடிவு எவ்வாறு எடுக்கப்படும்?
இந்த வார இறுதியில் பெறப்படும் பி.சி.ஆர் சோதனைகளின் முடிவுகளின் அடிப்படையிலேயே பயணக் கட்டுப்பாடுகளை நீடிப்பதா அல்லது நீக்குவதா என்ற முடிவு எடுக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன தெரிவித்தார்.
கொரோனாவின் மூன்றாவது அலையை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் ஜூன் 7 அன்று நீக்கப்படவிருந்தாலும், அது 14ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டு, மேலும் ஜூன் 21 வரை நீடித்திருந்தது.
இது அந்த, வாரத்தின் இறுதியில் பெறப்படும் பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளுக்கு ஏற்ப முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான முடிவுகளில் சுமார் 2300 முதல் 2800 வரை பாதிப்புகள் இருக்கும்.
இதேவேளை, நேற்று நாட்டில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,361 ஆக அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதில் கம்பஹா மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.