225 எம்பிக்களின் கல்வித்தகுதியை கேட்கும் முன்னாள் அமைச்சர்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆஷு மாரசிங்க(Ashu Marasinghe), இந்த ஆண்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 225 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகைமைகள் மற்றும் தொழில் மற்றும் சொத்துக் கடன் அறிக்கைகளை கோரி தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மூன்று விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோரிடம் இது தொடர்பான தகவல்களை ஆஷு மாரசிங்க கோரியுள்ளார்.
தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள்
2024 பொதுத் தேர்தலின்(general election 2024) அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கல்வித் தகுதி, வேலை வாய்ப்பு மற்றும் சொத்துப் பொறுப்பு அறிக்கைகளை வழங்க வேண்டும் என தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ஆஷு மாரசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |