ஆசிய கிண்ணத் தொடரின் முதல் போட்டியிலேயே இலங்கைக்கு அபார வெற்றி!
ஆசிய கிண்ணத் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியை தனதாக்கிக்கொண்டது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை இலங்கை அணிக்கு வழங்கியது.
அந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 349 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இந்த ஆட்டத்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அவிஷ்க பெர்னாண்டோ 124 பந்துகளுக்கு 133 ஓட்டங்களை பெற்றார் இதுவே இவ்வாட்டத்தில் அதிக ஓட்டங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து குரூஸ்புள்ளே 31 ஓட்டங்களையும்,மினோத் பானுக 57 ஓட்டங்களையும், சூரியபண்டார 43 ஓட்டங்களையும், அஷேன் பண்டார 35 ஓட்டங்களையும் அணித்தலைவர் துனித் வெல்லாலகே 31 ஓட்டங்களையும் பெற, இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 349 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
பந்துவீச்சில் சௌமிய சர்கார் மற்றும் ரிபோன் மொண்டல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பங்களாதேஷ் அணி
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 48.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 301 ஓட்டங்களை பெற்று இப் போட்டியில் தோல்வியை தழுவியது.
இலங்கை அணியின் பந்துவீச்சில் துஷான் ஹேமந்த மற்றும் பிரமோத் மதுசான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை அதிகபட்சமாக வீழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.