ஆசியக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை ஏ அணி அபார வெற்றி!
ஆசியக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஓமன் ஏ அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை ஏ அணி 217 ஓட்டங்களால் அபார வெற்றியைப் பெற்றுள்ளது.
இந்த முறை போட்டியின் அரையிறுதியில் தனது இடத்தை உறுதி செய்துள்ளது.
கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஓமன் ஏ அணித் தலைவர் இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தார்.
217 ஓட்டங்களால் அபார வெற்றி

அதன்படி, இலங்கை ஏ அணி 50 ஓவர்கள் நிறைவடைந்து 8 விக்கெட்டுகளை இழந்து 259 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
பசிந்து சூரியபண்டார 60 ஓட்டங்களை எடுத்தார். பந்துவீச்சில் அகிப் இலியாஸ் 58 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
260 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஓமன் ஏ அணியால் 17 ஓவர்கள் ஒரு பந்தில் 42 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
பந்துவீச்சில் சாமிக்க கருணாரத்ன 3 விக்கெட்டுகளை வீழ்த்திய அதேவேளை, துனித் வெல்லலகே, பிரமோத் மதுஷான் மற்றும் லஹிரு சமரகோன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைப் பகிர்ந்தனர்.
போட்டியின் நாயகனாக பசிந்து சூரியபண்டார தெரிவானார்.