ஆசிய கிண்ண போட்டிக்காக நெருப்பில் இறங்கி பயிற்சி செய்யும் பிரபல கிரிக்கெட் வீரர்! (காணொளி)
இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய கோப்பையை வெல்ல கிரிக்கெட் வீரர் ஒருவர் தீயில் இறங்கி பயிற்சி செய்யும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
எதிர்வரும் 30 ஆம் திக தி ஆரம்பமாகும் ஆசிய கோப்பை போட்டி, இலங்கையில் நடைபெற உள்ளது.
எனவே, இது இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் போன்ற அணிகளுக்கு சிறந்த பயிற்சியாக பார்க்கப்படுகிறது.
பயிற்சி காணொளி
Naim Sheikh working with a mind trainer ahead of Asia Cup. pic.twitter.com/mkykegJ06p
— Saif Ahmed ?? (@saifahmed75) August 18, 2023
இந்த நிலையில் பங்களாதேஷ் வீரர் மேற்கொள்ளும் பயிற்சி காணொளி இணையத்தில் வைரலாகி உள்ளது.
23 வயதான இடது கை பேட்ஸ்மேன் முகமது நயிம் ஷேக் வித்தியாசமான முறையில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

அவர் அணியின் மனநல பயிற்சியாளர் உடன் சேர்ந்து, நெருப்பில் இறங்கி நடந்து பயிற்சி பெற்று வருகிறார்.
6 அடி தூர நெருப்பில் முகமது நயிம் ஷேக் நடந்து வரும் காணொளி இணையத்தில் பரவியுள்ளது. இந்த பயிற்சி மனதை வலிமையாக்கும் பயிற்சி என்று கூறப்படுகிறது.