இலங்கைக்கான மற்றுமொரு நிதி உதவி : கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தம்!
இலங்கைக்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவி தொடர்பான ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இதன்படி, நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன மற்றும் வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் டக்காஃபோமி கடோனோ ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறிலங்கா அரசாங்கம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கிடையிலான பேச்சுக்களின் அடிப்படையில், இலங்கைக்கு கொள்கை அடிப்படையிலான கடன் உதவிகளை வழங்க வங்கி இணக்கம் தெரிவித்திருந்தது.
கடன் உதவி
இதன்படி, பொருளாதார நிலைத்தன்மை மற்றும் சீர்திருத்த திட்டங்களுக்காக ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் அடிப்படையில், இரண்டு உப திட்டங்களின் கீழ் 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கை மத்திய வங்கி மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இந்த கடனுதவியினூடாக பொருளாதார நிலைத்தன்மை மற்றும் சீர்திருத்த திட்டங்களுக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |