ரணிலும் சஜித்தும் ஒருபோதும் இணையப்போவதில்லை : சஜித் வலியுறுத்து
ஒரு சில பொய் செய்திகளை பிரசாரப்படுத்திவரும் நிறுவனங்கள் ஒன்றிணைந்து அரசாங்கத்திடமிருந்து தரகுப்பணம் பெற்றுக்கொண்டு, ரணிலும் சஜித்தும் இணையப்போவதாக பிரசாரம் செய்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று(11) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
பொய்ப் பிரசாரம்
“ஊடகங்கள் என்று கூறிக்கொள்ளும் பல அமைப்புகள் ஒன்று சேர்ந்து ரணிலும் சஜித்தும் ஒன்று சேர்வதாக பொய்ப் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. ரணிலும் சஜித்தும் ஒருபோதும் இணைய மாட்டார்கள்.
இது உண்மைக்கு புறம்பான செய்தி. ரணிலும் சஜித்தும் ஒரு போதும் இணையப்போவதில்லை என்ற இந்த செய்தியை இந்த சபையில் தெரிவித்துக்கொள்கிறேன்.
எனவே அரசாங்கத்திடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு இவ்வாறான அப்பட்டமான பொய்ப் பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |