ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள் நாளை தொடங்குகிறது
Japan
China
Tokyo
By Kathirpriya
22 விளையாட்டுக்களைக் கொண்ட ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளின் நான்காவது போட்டிகள் நாளை (21) ஆரம்பமாகவுள்ளது.
நாளை முதல் எதிர்வரும் சனிக்கிழமை வரை (21 - 28) சீனாவிலுள்ள ஹாங்சூ வில் இந்த போட்டிகள் இடம்பெறவுள்ளது.
பராலிம்பிக்ஸ் இல் தங்கப்பதக்கம்
இதில், தடகளம், வில்வித்தை, பூப்பந்து, பவர் லிஃப்டிங், ரோவிங், நீச்சல், டேபிள் டென்னிஸ் மற்றும் சக்கர நாற்காலி டென்னிஸ் என எட்டு விளையாட்டுகளில் விளையாடுவதற்காக இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 26 விளையாட்டு வீரர்கள் பங்குபற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2020 ஆம் ஆண்டு டோக்கியோவில் இடம்பெற்ற பாராலிம்பிக்ஸ் இல் தங்கப்பதக்கம் வென்ற தினேஷ் பிரியந்த ஹேரத் இலங்கை பரா அணிக்கு தலைவராக செயற்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த போட்டியில் 44 நாடுகளில் இருந்து 4,000 விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்