இன்றும் பங்குச் சந்தையில் வரலாறு காணாத மாற்றம்
புதிய இணைப்பு
கொழும்பு பங்குச் சந்தையில் நேற்றையதினம் வரலாற்றில் அதிகூடிய பங்கு விலை குறியீடு பதிவாகி இருந்ததோடு இன்றையதினம் அதனை விட அதிக பெறுமதி பதிவாகியுள்ளது.
கொழும்பு பங்குச்சந்தையின் (Colombo Stock Exchange) அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண்களில் இன்றைய நாள் (13.12.2024) முடிவில்14,205.34 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.
இன்றைய நாளுக்கான மொத்த பரிவர்த்தனை அளவு 6.1 பில்லியன் ரூபா ஆகும்.
முதலாம் இணைப்பு
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக கொழும்பு பங்குச் சந்தையின் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) 14,000 புள்ளிகளைத் தாண்டியுள்ளது.
குறித்த விடயம் கொழும்பு பங்குச் சந்தை (Colombo Stock Exchange) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மொத்த பரிவர்த்தனை
இதற்கமைய நேற்றைய (12.12.2024) நாள் முடிவில், அனைத்து பங்கு விலை குறியீடு 116.6.4 புள்ளிகள் அதிகரித்து 14,001.73 புள்ளிகளாக உள்ளது.
அத்துடன், S&P தரப்படுத்தல் குறியீடு 42.80 புள்ளிகளால் அதிகரித்து 4,186.80 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, மொத்த பரிவர்த்தனை அளவு 7.35 பில்லியன் ரூபா ஆகும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
3 நாட்கள் முன்