யாழில் முதியவர் மீது கொடூர தாக்குதல்: காவல்துறையில் முறைப்பாடு(படங்கள்)
யாழ்ப்பாணம்-கைதடி ஆயுர்வேத வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதல் சம்பவமானது, நேற்று(28) வைத்தியசாலையில் பணிப்பாளர் ஒருவரால் நடத்தப்பட்டுள்ளது.
முறைப்பாடு
இந்நிலையில், தாக்குதல் சம்பவம் தொடர்பில் முதியவரின் மனைவி சாவகச்சேரி காவல்நிலையித்தில் முறைபாடு செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் பாசிச வாதம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
மேலதிக விசாரணை
அதன்போது, அவரை பராமரிப்பதற்காக பணிப்பாளர் ஒருவர் 2500 ரூபா சம்பளத்திற்கு நியப்பட்டிருந்த நிலையில், அந்த முதியவர் மீது நேற்றையதினம் அந்த பராமரிப்பாளர் தாக்குதல் நடாத்தியுள்ளார்.
தாக்குதலுக்குள்ளான முதியவரை உறவினர் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளதொடு, சந்தேக நபர் தொடர்பில் சாவகச்சேரி காவல்துறையினர் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |