கண்டியில் காவல்துறை உத்தியோகத்தர் மீது தாக்குதல்: ஒருவர் கைது
கண்டியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரை தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முற்பட்ட சந்தேகநபரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கண்டி காவல்நிலையத்தில் பணியாற்றும் காவல்துறை உத்தியோகத்தர் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மகிழுந்து ஒன்றை நிறுத்தி சோதனையிட முயற்சித்த போதே அதில் பயணித்தவர், குறித்த காவல்துறை உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
மதுபோதையில் இருந்தமை
பின்னர் குறித்த சந்தேகநபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் காவல்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளில் அவர் மதுபோதையில் இருந்தமை தெரியவந்துள்ளது.
நீரில் மூழ்கி உயிரிழப்பு
இதேவேளை, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் கடமையாற்றும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் களுத்துறை கட்டுகுருந்த பிரதேசத்தில் கடலில் நீராட சென்ற நிலையில் நீரில் மூழ்கி நேற்று (25) உயிரிழந்துள்ளார்.
களுத்துறை - நாகொட பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |