இரு காவல்துறை உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல்: குற்றவாளிகள் தலைமறைவு
பம்பலப்பிட்டி கடற்பகுதியில் இரு காவல்துறை உத்தியோகத்தர்களை நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
பிற்பகல் 1 மணியளவில் சந்தேக நபர் முச்சக்கர வண்டியில் பயணித்ததாக கிடைத்த தகவலுக்கு அமைய, அதே வீதியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறை உத்தியோகத்தர் சந்தேக நபர் பயணித்த முச்சக்கரவண்டியை நிறுத்தி சோதனையிட்டுள்ளார்.
மற்றுமொரு காவல்துறை உத்தியோகத்தர் சம்பவ இடத்திற்கு வந்து அவரைப் பிடிக்க முற்பட்ட போது சந்தேக நபர் காவல்துறையினரை தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த தாக்குதலில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் வயிற்றிலும் மற்றையவர் கையிலும் காயமடைந்துள்ளதுடன், இருவரும் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சந்தேக நபர் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 3 நாட்கள் முன்