இலங்கைக்கு இந்தியா அளித்த உறுதிமொழி(படம்)
இலங்கைக்கு இந்த ஆண்டுக்கான யால பருவத்திற்கு உரம் வழங்குவதாக இந்தியா உறுதியளித்துள்ளது.
இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட இந்திய அதிகாரிகளுடனான சந்திப்பின் போது இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளதாக 'தி இந்து' செய்தி வெளியிட்டுள்ளது.
மிலிந்த மொரகொட, இந்திய உரத் திணைக்களத்தின் செயலாளர் ஸ்ரீ ராஜேஷ் குமார் சதுர்வேதியைச் சந்தித்து, 65,000 மெற்றிக் தொன் யூரியாவை யால பருவத்திற்கு வழங்குவதற்கான தீர்மானத்திற்கு நன்றி தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை அரசாங்கம் உரத்திற்கான பணத்தை எவ்வாறு செலுத்தப் போகிறது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
நேபாளத்திற்கு அடுத்தபடியாக உரம் வழங்குவதில் இந்தியாவினால் சான்றிதழைப் பெற்ற இரண்டாவது நாடு இலங்கை என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
