இலங்கையில் அதிகரிக்கும் ஆஸ்துமா நோயாளர்கள் : வெளியான தகவல்
நாட்டில் தற்போது ஆஸ்துமா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலகளவில் ஒவ்வொரு 100,000 பேரில் 3,340 பேர் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறித்த விடயத்தினை களுபோவில போதனா வைத்தியசாலையின் சுவாச நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் ஆஷா சமரநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்ஹேலர் அடிப்படையிலான சிகிச்சை
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ”மே மாதம் 6ஆம் திகதி உலக ஆஸ்துமா நோய் தினம் ஆகும். உலகளவில் இளைஞர்களிடையே ஆஸ்துமா அதிகரித்துள்ளது.
இன்ஹேலர் அடிப்படையிலான சிகிச்சையானது பக்க விளைவுகளை ஏற்படுத்தாமல் ஆஸ்துமாவை திறம்பட நிர்வகிக்க உதவுகின்றது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மக்கள் மத்தியில் ஆஸ்துமா பரவலாக இருந்தாலும், நாட்டில் பல தனிநபர்கள் கண்டறியப்படாமல் உள்ளனர் என சுவாச நோய் வைத்திய நிபுணர் சமன்மலி தல்பதடு என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
