குரு பெயர்ச்சி 2024: கல்யாண யோகம் கிட்டவுள்ள மூன்று ராசிக்காரர்கள்...!
குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு நாளை (1)இடப்பெயர்ச்சி அடைகிறார். குருபகவான் காலபுருஷ தத்துவப்படி ராசி மண்டலத்தின் இரண்டாம் வீட்டிற்கு சென்று அமரப்போகிறார்.
ராகுவை விட்டு விலகிய குரு, சனி பார்வையில் இருந்தும் விலகி சுபத்துவம் அடைகிறார். இதனால் சில ராசிக்காரர்களுக்கு குரு பலன் வரப்போகிறது.
குரு ரிஷப ராசியில் இருந்து தனது 5 ஆம் பார்வையால் கன்னி ராசியையும். 7 ஆம் பார்வையால் விருச்சிக ராசியையும் பார்க்கிறார். 9 ஆம் பார்வையால் மகர ராசியையும் பார்வையிடுகிறார்.
கன்னி
மே மாதம் நிகழப்போகும் குரு பெயர்ச்சி நன்மை தரக்கூடியதாக அமைந்துள்ளது. பாக்கிய குருவாக 9 ஆம் இடத்தில் பயணம் செய்யப்போகும் குருவின் பார்வை உங்கள் ராசியின் மீது விழுகிறது. உங்களுக்கு குரு பலன் வந்து விட்டது திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள் நிகழும். ராசிக்கு 3 ஆம் வீடு, 5 ஆம் வீடுகளின் மீது குரு பகவானின் பார்வை படுவதால் முயற்சிகள் வெற்றியடையும், கோடி கோடியாக செல்வம் தேடி வரப்போகிறது.
விருச்சிகம்
இந்த குருப்பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஏற்றத்தை தரக்கூடியது. ராசிக்கு 7 ஆம் வீட்டில் அமர்ந்து தனது ஏழாம் பார்வையால் விருச்சிக ராசியை பார்க்கிறார் குருபகவான். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே உற்சாகம் அதிகரிக்கும். குருபலன் வந்து விட்டது திருமணம் கைகூடி வரும். செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும். மூத்த சகோதரரின் அன்பு அதிகரிக்கும். நிறைய பணம் வரும். கோடி கோடியாக தேடி வரும் செல்வத்தை அனுபவிக்கத் தயாராகுங்கள்.
ரிஷபம்
ஜென்ம குருவாக பயணம் செய்யப்போகிறார். கூட்டுத் தொழில்கள் சிறப்படையும், பூர்வீக சொத்துக்கள் மூலம் வருமானம் அதிகரிக்கும். பிள்ளைகள் வழியில் நன்மைகள் பல நடக்கும். கணவன், மனைவிக்குள் அன்பும் பாசமும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. உங்கள் ராசிக்கு 5 ஆம் வீடு, 7 ஆம் வீடு, 9ஆம் வீடுகளின் மீது குருவின் பார்வை விழுவது சிறப்பான அம்சமாகும். கல்யாண வைபோகம் தேடி வரப்போகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |