ஜூலையில் நடக்க இருக்கும் 4 கிரக பெயர்ச்சிகள் - ராஜயோக பலன்கள் யாருக்கு தெரியுமா..!
ஜூலை மாதத்தில் செவ்வாய், புதன், சுக்கிரன், சூரியன் என 4 முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி நடக்கவுள்ளது.
ஜூலை 1ம் திகதி செவ்வாய் சிம்ம ராசிக்கும், ஜூலை 7இல் சுக்கிரன் சிம்மத்திற்கும், ஜூலை 8இல் புதன் கடக ராசிக்கும், ஜூலை 17இல் சூரியன் கடக ராசிக்கும் பெயர்ச்சி ஆகின்றனர். ஜூலை 23இல் சுக்கிரன் சிம்மத்தில் வக்ர நிலை அடைகிறார்.
25ஆம் திகதி புதன் கடகத்திலிருந்து சிம்மத்திற்கு மாறுகிறார். ஜூலை மாதத்தில் புதாதித்ய ராஜ யோகம், விபரீத ராஜயோகம் என இரு நல்ல யோகங்கள் உருவாக உள்ளது.
புதாதித்ய ராஜ யோகம்

ஜூலை மாத தொடக்கத்தில் மிதுனத்தில் புதன் மற்றும் சூரியன் சஞ்சரிக்கின்றனர். இங்கு புதன் பகவான் ஆட்சி அதிபதியாக சஞ்சரிக்கிறார்.
அத்தோடு சூரியனுடன் சேர்ந்து புதாதித்ய யோக பலனை தந்தருளிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் ஜூலை 8ஆம் திகதி புதன் கடகத்திற்கு மாறினாலும், யூலை 17இல் சூரியனும் கடகத்திற்கு மாறும் போது மீண்டும் புதாதித்ய ராஜ யோகம் உருவாகிறது.
இதனால் கடகம், விருச்சிகம், மகர ராசியினருக்கு மிகச்சிறப்பான ராஜ யோகம் உருவாக உள்ளது.
விபரீத ராஜயோகம்

ஜோதிடத்தில் 6, 8, 12 ஆகிய பாவங்கள் மறைவு நிலை எனவும் இவை சாதகமற்ற நிலைகளாகவும் குறிப்பிடப்படுகிறது.
இந்த நிலை அதிபதிகள் ஒன்றிணைந்து இருப்பது அல்லது 6,8,12இல் பரிவர்த்தனை செய்து கொண்டிருப்பது விபரீத ராஜ யோகம் ஆகும்.
இந்நிலையில் மிதுன ராசிக்கு 6ஆம் வீட்டு அதிபதி செவ்வாய் மற்றும் 12ஆம் வீட்டு அதிபதி சுக்கிரன், ராசிக்கு 3ஆம் வீடான சிம்மத்தில் இருவரும் சேர்ந்து சஞ்சரிக்கின்றனர். இதன் காரணமாக மிதுனத்தில் விபரீத ராஜ யோகம் உருவாகிறது.
மேலே குறிப்பிடப்பட்ட கிரகங்களின் சேர்க்கையால் உருவாகும் புதாதித்ய ராஜயோகம் மற்றும் விபரீத ராஜயோகத்தால் சில ராசியினரின் வாழ்க்கையில் திடீர் மற்றும் குறிப்பிடத்தக்க வெற்றியைக் கொண்டுவரும்.
கடக ராசி

புதாதித்ய ராஜயோகம் கடக ராசியிலேயே நடக்கிறது. அதே போல விபரீத ராஜயோகம் ராசிக்கு 2ஆம் இடமான தன இடத்தில் நடக்கிறது.
அதுமட்டுமல்லாமல் சூரியன் விரய இடத்திலும், தொடர்ந்து ராசியிலும் சஞ்சரிக்க உள்ளார். இந்த ராஜ யோகங்களால் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். முதலீட்டில் இலாபம் அதிகரிக்கும்.
உங்கள் செயல்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். உத்தியோகம், தொழிலில் மேன்மைக்கான வாய்ப்புகள் உண்டு. சூரியனின் அமைப்பால் உங்களுக்கு நேர்மறை ஆற்றலை நிரப்புவார்.
மாணவர்கள் கல்வியில் மேன்மை அடைவார்கள். வெளிநாடு முயற்சி சாதக பலன் தரும். வியாபாரம், நிதி முதலீட்டில் நல்ல இலாபம் கிடைக்கும். உங்களின் அறிவுத் திறன் மற்றும் முடிவு எடுக்கும் திறன் மேம்படும்.
விருச்சிக ராசி

விருச்சிக ராசியினருக்கு இந்த விபரீத ராஜ யோகம் ராசிக்கு 10ஆம் இடத்திலும், புதாதித்ய யோகம் 8ஆம் இடத்திலும் உருவாகிறது.
இந்த அமைப்பால் உங்கள் ராசிக்கு திடீர் பண இலாபம் ஏற்படும். வேலை மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றமும், இலாபமும் கிடைக்கும்.
பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உள்ளன. ஆன்மிகத்தின் மீது ஆர்வம் அதிகரிக்கும். உங்களின் கெளரவம் அதிகரிக்கும்.
மகர ராசி

மகர ராசியை சேர்ந்தவர்களுக்கு இந்த இரு ராஜயோக பலன்கள் சிறப்பாக கிடைக்கப் பெறும். உங்களுக்கு புதன் ஆறு மற்றும் ஒன்பதாம் வீடுகளுக்கு அதிபதியாகி ஆறாம் வீட்டில் அமர்ந்துள்ளார்.
இந்த நிலையில் புதன் எட்டாம் வீட்டில் பலம் பெறுவதால் அதன் பலன் அதிகரிக்கும். நீதிமன்ற வழக்குகள் மற்றும் சட்ட விடயங்களில் வெற்றி கிடைக்கும்.
நிதி முதலீட்டில் இலாபம் கிடைக்கும். வெளிநாட்டுப் பயணங்கள் சாத்தியமாகும். தனிநபர்களுடனான நட்பும், சமூகத்தில் மரியாதையும் உயரும்.
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 10 மணி நேரம் முன்