மேஷம் | - மனைவியின் பங்காக சிறிய சொத்து ஒன்றை நீங்கள் பெறுவீர்கள். எதிர்காலம் பற்றிய கவலையால் தூக்கம் இழப்பீர்கள்.
- ஒரு சிலர் கடன் வாங்கியாவது நினைத்த காரியத்தை நிறைவேற்றுவீர்கள்.
குடும்பத்தினருடன் சுற்றுலா செல்வீர்கள். உறவினர்களின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள்.எதிரிகளால் உண்டான எதிர்ப்புகளையும் மன உளைச்சலையும் கடந்து செல்வீர்கள்.
-
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, சாம்பல், வெள்ளை, இளம் சிவப்பு. அதிர்ஷ்ட எண்: 9 7 6 1
|
ரிஷபம் | - காணாமல்போன பொருளை தேடி கண்டு பிடிப்பீர்கள். வயிற்றுக்கோளாறுக்காக மருத்துவச் சிகிச்சை செய்வீர்கள். வெளியூரில் சந்திக்க வேண்டிய நபர்களால் பயன் பெறுவீர்கள்.
-
வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி ஒன்றை பெறுவீர்கள். கால நேரம் பார்க்காமல் வேலை செய்து பாராட்டைப் பெறுவீர்கள். ஆன்லைன் போன்ற சூதாட்டங்களில் ஈடுபடாதீர்கள்.
-
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம்சிவப்பு, சிவப்பு. அதிர்ஷ்ட எண்: 6 1 2 9
|
மிதுனம் | - வருமானத்திற்கு இடையூறாக இருந்த தடைகளை அகற்றுவீர்கள்.மனதில் தைரியமும் வேகமும் அதிகரித்து வியாபாரத்தை விருத்தி செய்தீர்கள்.
- சகோதர வகையில் ஆதாயம் அடைவீர்கள்.
ஆனால் குடும்பத்தில் நிம்மதி குறைந்து சஞ்சலப்படுவீர்கள். மருத்துவம், கணிதம், பொறியியல், சட்டம் படிக்கும் மாணவர்கள் வெறியோடு படித்து வெற்றி காண்பீர்கள்.
-
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, கருப்பு, மஞ்சள். அதிர்ஷ்ட எண்: 5 9 4 3
|
கடகம் | - தென்னைமரதோப்பு குத்தகைகளில் அதிக வருமானம் பார்ப்பீர்கள். பணப்பயிர்களை நடவு செய்து விற்பனையில் சாதனை படைப்பீர்கள்.
- நீண்டநாள் நண்பரின் உதவியால் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். ஐடி ஊழியர்கள் அதிகச் சம்பளம் பெறுவீர்கள்.
காதலியின் உறுதுணையால் வேலைப்பளுவை குறைப்பீர்கள். முக்கிய கடனை அடைப்பீர்கள்.
-
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், கருநீலம், பச்சை. அதிர்ஷ்ட எண்: 2 3 8 5
|
சிம்மம் | - கூட இருந்தே குழி பறிக்கும் நண்பர்களை அடையாளம் காண்பீர்கள். சொன்ன சொல்லைக் காப்பாற்றி நல்ல பெயர் எடுப்பீர்கள்.
- கூட்டுத் தொழிலில் இருந்த சங்கடங்கள் விலகி சந்தோசம் அடைவீர்கள்.
வாக்கு சாதுர்யத்தால் எல்ஐசி முகவர்கள் அதிக பாலிசி சேர்ப்பீர்கள்.
- குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் எண்ணத்தைக் கைவிட்டு நேர்வழியில் நடப்பீர்கள்.
-
அதிர்ஷ்ட நிறம்: இளம்சிவப்பு, சாம்பல், வெள்ளை. அதிர்ஷ்ட எண்: 1 7 6
|
கன்னி | - கடன் சுமை காரணமாக இருந்த மன அழுத்தம் மறைந்து நிம்மதி பெறுவீர்கள். புதிய தொழில்களுக்கான வழிமுறைகளை வகுப்பீர்கள்.
- பழைய நண்பர்களின் உதவியை நாடுவீர்கள்.
அரசுப் பணியாளர்கள் பதவியில் மாற்றமும் ஊதிய உயர்வும் அடைவீர்கள்.கணவன் மனைவியிடையே ஒற்றுமையை பலப்படுத்துவீர்கள். மாமனாரின் உதவியால் மகிழ்ச்சி அடைவீர்கள்.
-
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, இளம்சிவப்பு, வெள்ளை, சிவப்பு. அதிர்ஷ்ட எண்: 5 1 2 9
|
துலாம் | - அதிக சிரமப்பட்டு வியாபாரத்தை நடத்துவீர்கள். தொழிலை விரிவுபடுத்த இரவுத் தூக்கத்தை தொலைப்பீர்கள். எதிர்பார்த்த அரசாங்க வேலைகள் தாமதமாகவே நடப்பதால் தளர்ச்சி அடைவீர்கள்.
-
உறவினர்கள் உங்களை அவமானப்படுத்த நினைப்பார்கள். அதைக் கடந்து அந்தஸ்தை உயர்த்தி கொள்வீர்கள். வியாபாரத்தில் சிறப்பான அனுகூலம் பெறுவீர்கள்.
-
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு, கருப்பு ,பச்சை. அதிர்ஷ்ட எண்: 6 9 4 3
|
விருச்சிகம் | - வாகனங்கள் பழுதாகி எதிர்பாராத செலவை செய்வீர்கள். வீடு கட்டும் வேலைகளில் சுணக்கத்தை காண்பீர்கள். ரியல் எஸ்டேட் தொழிலில் மந்த நிலையால் சங்கற்றப்படுவீர்கள்.
-
ஆன்லைன் வர்த்தகங்களில் ஆபத்தை சந்திப்பீர்கள். பணியாளர்கள் பைல்களைக் கையாளும்போது கவனத்தை சிதற விடாதீர்கள். வாக்குறுதி வழங்கி அவதியில் சிக்கிக் கொள்ளாதீர்கள்.
-
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, மஞ்சள், பச்சை, கருநீலம். அதிர்ஷ்ட எண்: 9 3 8 5
|
தனுசு | - திடீர் பணவர வந்து முக்காடி நிற்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட பல மடங்கு லாபம் பார்ப்பீர்கள். வாகன விற்பனையில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள்.
-
கட்டுமானத் தொழிலில் இருப்பவர்கள் கணிசமான லாபம் பார்ப்பீர்கள். இல்லத்தரசிகள் கணவருக்கு உறுதுணையாகத் திகழ்வீர்கள்.காதலியுடன் உல்லாச பயணம் செய்வீர்கள்.
-
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சாம்பல், வெள்ளை, இளம்சிவப்பு. அதிஷ்ட எண்: 3 7 6 1
|
மகரம் | - தொலைதூரப் பயணங்களால் குடும்பத்தைப் பிரிந்து செல்வீர்கள். மேற்படிப்புக்காக பிள்ளைகளை வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பீர்கள். சந்தோசங்களை அனுபவிப்பதற்கு ஆடம்பரமாகச் செலவு செய்வீர்கள்.
-
அடுத்தவருக்கு உதவி செய்வதன் மூலம் மதிப்பு, மரியாதை. செல்வாக்கை உயர்த்திக் கொள்வீர்கள். உறவுகளைப் பலப்படுத்த முயற்சி எடுப்பீர்கள்.
-
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், இளம்சிவப்பு, வெள்ளை, சிவப்பு. அதிர்ஷ்ட எண்: 8 1 2 9
|
கும்பம் | - பிள்ளைகளின் வகையில் பெற்றோர்கள் சோதனையைச் சந்திக்கும் நிலைக்கு ஆளாவீர்கள். கணவன்-மனைவிக்குள் வீண் பிரச்சனைகள் உருவாகி வீட்டை ரணகளம் ஆக்குவீர்கள்.
-
வியாபாரத்தில் அதிக லாபம் கிடைத்தாலும் செலவும் கை மீறி போவதால் கவலைப்படுவீர்கள். மனைவியின் ரத்த அழுத்த நோய்க்கு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை எடுத்துக்கொள்ள செய்வீர்கள். சந்திராஷ்டமம். நிதானமாக செயல்படுங்கள்.
-
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், வெள்ளை, கருப்பு, மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 8 9 4 3
|
மீனம்ம | - அதிக அலைச்சல் காரணமாக உடல் சோர்வு அடைவீர்கள். வேளாவேளைக்கு உணவருந்தக் கூட நேரம் கிடைக்காமல் சிரமப்படுவீர்கள்.
- வெளியூர்ப் பயணங்களால் பயன் அதிகம் பெற மாட்டீர்கள்.
நண்பர்களிடமிருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்காமல் ஏமாற்றம் அடைவீர்கள். சின்ன காயம் படுவீர்கள். சந்திராஷ்டம நாள். நிதானமாக நடந்து கொள்ளுங்கள்.
-
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், கருநீலம், பச்சை. அதிர்ஷ்ட எண்: 3 8 5
|