அஸ்வெசும பயனாளர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்! வெளியானது வர்த்தமானி
அஸ்வெசும நலன்புரி உதவிகளை வழங்குவதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அதிபர் ரணில் விக்ரமசிங்கவால் (Ranil Wickremesinghe) வெளியிடப்பட்டுள்ளது.
நாணய மற்றும் பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் அதிபர் வெளியிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின்படி, எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை அஸ்வெசும நிவாரணத்தை பெறும் குறிப்பிட்ட சிலருக்கு இந்த மானியம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அஸ்வெசும நிவாரணம்
ஏற்கனவே அறிவித்தமைக்கமைய, அஸ்வெசும நிவாரணம் பெற தகுதியுள்ளவர்களுக்கு வழங்கப்படும் கால அவகாசம் எதிர்வரும ஜுன் மாதம் 30 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது
அத்துடன், மற்றுமொரு குழுவினருக்கு நிவாரணம் வழங்குவதற்கான கால அவகாசம் இந்த ஆண்டின் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.
இந்த நிலையில், ரணில் விக்ரமசிங்கவால் புதிதாக வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், நிவாரணப் பலன்களுக்கு உரித்துடைய சிலருக்கு 2026 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் திகதி வரையிலும் மற்றவர்களுக்கு 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரையிலும் நிவாரண உதவிகள் வழங்கப்படவுள்ளன.
அத்துடன், நலிந்த குடும்பங்களுக்கு மாதம் 5000 ரூபாய், ஏழை குடும்பத்திற்கு 8500 ரூபாய் மற்றும் மிகவும் ஏழ்மையான குடும்பத்திற்கு 15000 ரூபாய் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |