திறைசேரியில் மேலும் 500 மில்லியன் கொடுப்பனவில் சிக்கல்: சபாநாயகருக்கு பறந்த கடிதம்
அஸ்வெசும பயனாளிகளுக்கு மேலதிக நிதி இரண்டு முறை செலுத்தப்பட்டுள்ளதாகவும் இது குறித்து நாடாளுமன்றம் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கோரிக்கையை Free Lawyers அமைப்பு சபாநாயகருக்குக் கடிதம் மூலம் முன்வைத்துள்ளது.
நலன்புரி நன்மைகள் சபையூடாகச் சுமார் 5000 இலட்சம் ரூபாவிற்கும் (500 மில்லியன்) சற்றே குறைவான தொகை மேலதிகமாகச் செலுத்தப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
பொறுப்பற்ற தன்மை
இதனடிப்படையில் ஏப்ரல் மாதத்தில் அஸ்வெசும நன்மைகளைப் பெற வேண்டிய சுமார் பதினேழு இலட்சத்து முப்பத்து மூவாயிரம் (1,733,000) குடும்பங்களுக்கு இவ்வாறு மேலதிக பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாக Free Lawyers அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் டொலர் காணாமல் போனதற்கு நிகரான வகையில் அஸ்வெசும பயனாளிகளுக்கு இருமுறை அல்லது மேலதிகமாக நிதி வழங்கப்பட்டமையானது இன்றைய அரச நிதி முகாமைத்துவத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, குழப்பம் மற்றும் பொறுப்பற்ற தன்மையை நன்கு பிரதிபலிக்கிறது என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே, அரசியலமைப்பின் 148 ஆவது பிரிவின் கீழ் அரசாங்கத்தின் நிதி அதிகாரம் கொண்டுள்ள நாடாளுமன்றத்தின் ஊடாக இது குறித்து விசாரணை நடத்துமாறு அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |