அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்
ஒக்டோபர் மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவு இன்று (29) முதல் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட உள்ளது.
அஸ்வெசும நல உதவித் திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ், 70 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 616,362 முதியோருக்கு உதவித்தொகை வழங்க மொத்தம் ரூ. 3.08 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ், 70 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 79,520 மூத்த குடிமக்களுக்கு ரூ. 397 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
இரண்டு கட்டங்கள்
அதன்படி, இத்திட்டத்தின் இரண்டு கட்டங்களின் கீழும், ஒக்டோபர் மாதத்திற்காக 695,882 முதியோருக்கு மொத்தம் ரூ. 3.47 பில்லியன் வழங்கப்பட உள்ளது.

தகுதியுள்ள பயனாளிகள் இன்று (29) முதல் தங்களது அஸ்வெசும வங்கிக் கணக்குகள் மூலம் ஒக்டோபர் மாதத்திற்கான முதியோர் உதவித்தொகையைப் பெற்றுக்கொள்ளலாம் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |