வடக்கில் ஆரம்பிக்கப்படவுள்ள அஸ்வெசும இரண்டாம் கட்டம்: வெளியான மகிழ்ச்சித் தகவல்
இலங்கையின் பல மாகாணங்களில் உள்ள கிராம உத்தியோகத்தர்கள் அஸ்வெசும பயன் திட்டத்தில் இணைந்து கொள்ளாத நிலையில் அஸ்வெசும இரண்டாம் கட்டத்தை வடமாகாணத்தில் (Northern Province) ஆரம்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
வடமாகாண கிராம உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடாமல் அரசாங்கத்தின் நலன்புரி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு உறுதுணையாக இருந்தமையினால் வடமாகாணத்தில் இரண்டாம் கட்ட நிவாரணப்பணிகளை ஆரம்பிப்பது தொடர்பில் நிதியமைச்சு (Ministry of Finance) கவனம் செலுத்தியுள்ளது.
தற்போது இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் அனுப்பியவர்களின் தகவல்களை சரிபார்ப்பது போன்ற நடவடிக்கைகளில் இருந்து கிராம அலுவலர்கள் ஒதுங்கி உள்ளனர்.
நிதி அமைச்சு
தங்களின் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை அரசின் அஸ்வெசும மானிய திட்டத்தில் சேர மாட்டோம் என கிராம அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை இரண்டாம் கட்டத்தின் கீழ் நான்கரை இலட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, இருபத்தி நான்கு லட்சம் குடும்பங்களுக்கு நிவாரணப் பலன்கள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |