நாளையதினம் வங்கிகணக்கிற்கு வருகிறது பணம்
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான 2026 ஜூலை மாதத்திற்குரிய கொடுப்பனவு நாளை (31) பயனாளிகளின் அஸ்வெசும வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இதற்கமைய, அஸ்வெசும நலன்புரிப் பலன்கள் செலுத்தும் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட 621,638 முதியோர்களுக்காக 3,108,190,000 ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் கொடுப்பனவை பெற்றுக்கொள்ள முடியும்
மேலும், இதன் இரண்டாம் கட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட 77,324 முதியோர்களுக்காக 386,620,000 ரூபா நிதி வைப்பிலிடப்படவுள்ளது.

அதற்கமைய, இரண்டு கட்டங்களின் கீழ் 698,962 பயனாளிகளுக்குக் செலுத்தப்பட வேண்டிய மொத்தத் தொகை 3,494,810,000 ரூபாவாகும்.
உரிய பயனாளிகள் நாளை முதல் தங்களுக்கான முதியோர் கொடுப்பனவை அஸ்வெசும வங்கிக் கணக்குகள் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |