சர்ச்சைக்குள்ளான போதகர் ஜெரோம் பெர்னாண்டோ: உத்தரவை மீளப் பெற்ற நீதிமன்றம்
இலங்கையின் சர்ச்சைக்குள்ளான போதகர் ஜெரோம் பெர்னாண்டோ, நாடு திரும்பியதும் கைது செய்யப்பட வேண்டுமென்ற உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் மீள பெற்றுள்ளது.
ஜெரோம் பெர்னாண்டோ, தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவுக்கமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் மதச்சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் கடந்த மே மாதம் கருத்து வெளியிட்ட போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை கைது செய்யுமாறு சிறிலங்கா காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
மேன்முறையீட்டு நீதிமன்றம்
இந்த நிலையில், தாம் நாடு திரும்பியதும் கைது செய்வதை தடுக்குமாறு கோரி ஜெரோம் பெர்னாண்டோ, அடிப்படை மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
இதையடுத்து, கடந்த சில மாதங்களாக அவர் வெளிநாட்டில் வசித்து வந்த நிலையில், நாடு திரும்பியதும் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டாமென மேன்முறையீட்டு நீதிமன்றம் சிறிலங்கா குற்றப்புலனாய்வு பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், அவர் இலங்கைக்கு திரும்பிய 48 மணித்தியாலங்களில் சிறிலங்கா குற்றப்புலனாய்வு பிரிவில் வாக்குமூலம் வழங்க வேண்டுமெனவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNAL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |