அத்துரெலிய ரதன தேரர் கட்சியிலிருந்து நீக்கம்! கேள்விக்குறியாகும் நாடாளுமன்ற உறுப்புரிமை
SriLanka
Nimal Punchihewa
Athuraliya Ratana Thera
Abe Janapala Party
Ven.Vadanigama Wimalatissa Thera
By Chanakyan
கட்சி உறுப்புரிமையிலிருந்து அத்துரெலிய ரத்ன தேரரை ( Athuraliya Ratana Thera) நீக்கியுள்ளதாக எங்கள் மக்கள் சக்தி கட்சி (அபே ஜனபல கட்சி) தெரிவித்துள்ளது.
கட்சியின் பொதுச் செயலாளர் வண.வெடினிகம விமலதிஸ்ஸ தேரர் (Ven.Vadanigama Wimalatissa Thera) இதனை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.
நேற்றைய தினம் தமக்கு இந்த அறிவிப்பு கிடைத்ததாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிஹேவா (Nimal Punchihewa) தெரிவித்துள்ளார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் மக்கள் சக்தி கட்சிக்கு ஒரு தேசிய பட்டியல் கிடைத்துள்ளது.
நீண்ட கால இழுபறியின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினராக கடந்த ஜனவரி மாதம் சத்தியப்பிரமானம் செய்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.