சிறையில் அடைக்கப்பட்ட பிக்குகளை சந்திக்க திருமலை விரைந்த அதுரலிய ரத்னதேரர்
திருகோணமலை கடற்கரையோர புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள பெளத்த மத குருக்களை சந்திப்பதற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரர் வருகைதந்திருந்தார்.
சந்திப்பின் பின்னராக ஊடகங்களுக்கு அவர் கருத்து தெரிவிக்கையில்,
குறித்த பெளத்த மதகுருக்களின் கைதானது ஒரு திட்டமிட்ட செயலாக பார்க்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
மீண்டும் குழப்பநிலையை உருவாக்க முயலும் அநுர அரசு
நான் இந்த அரசாங்கத்திற்கு சொல்ல விரும்புவது இவ்வாறானசெயற்பாடுகள் மூலமாக இந்த அரசாங்கமானது மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.

இதன்மூலமாக வீணாக அமைதியாக இருக்கும் நாட்டில் இனவாதம் மத வாதத்தினை ஏற்படுத்தி மீண்டும் ஒரு குழப்ப நிலையை உருவாக்கவே இந்த அரசாங்கம் முனைவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை விளக்கமறியலில் வைக்கப்பட்ட தேரர்களை சந்திப்பதற்காக சர்வதேச போதிதம்மா மனித அகிம்சை ஒன்றியத்தின் தலைவர் மற்றும் பெளத்த தர்ம அலுவல்கள் பாதுகாப்பு சபையின் பிரதி நிதி கலகம் குசலதம்ம தேரர் உள்ளிட்ட குழுவினர் வருகை தந்திருந்ததுடன் அவர்களுடன் மேலும் சில பெளத்த அமைப்புக்கள் சார்ந்த பெளத்த துறவிகளும் வருகை தந்திருந்தனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |