அரச உத்தியோகஸ்தர் ஒருவரின் வீட்டின் மீது தாக்குதல்: என்.பி.பி நடத்திய உறுப்பினர் பதவி விலகல்
யாழ்ப்பாணத்தில் வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைதான தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் சந்திரகுமார் கணேசரூபன் தனது உள்ளூராட்சி சபை உறுப்பினர் பதவியை பதவி விலகல் செய்துள்ளார்.
நெல்லியடி பகுதியில் உள்ள ஓய்வுபெற்ற அரச உத்தியோகஸ்தர் ஒருவரின் வீட்டின் மீது கல்லெறிந்து தாக்குதல் , நடாத்தி , வீட்டு வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கருவிகளையும் குறித்த உள்ளூராட்சி உறுப்பினர் தலைமையிலான கும்பல் நேற்று முன்தினம் சேதப்படுத்தியது.
இது தொடர்பில் வீட்டார் நெல்லியடி காவல் நிலையத்திற்கு தொலைபேசி ஊடாக அறிவித்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் கும்பலை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
பதவி விலகல்
கைது செய்யப்பட்டவர்கள் காவல்நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு விசாரணைகளின் பின்னர் காவல்துறை பிணையில் செல்ல அனுமதித்தனர்

இந்நிலையில் தற்போது குறித்த உறுப்பினர் தனது உள்ளூராட்சி உறுப்பினர் பதவி விலகல் செய்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |