கிரிக்கெட் தோல்வியால் இந்திய கடற்றொழிலாளர்கள் மீது தாக்குதல் : தமிழக முன்னாள் அமைச்சர் கண்டுபிடிப்பு
இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் தோல்வியடைந்ததால் தமிழக கடற்றொழிலாளர்கள் மீது சிறிலங்காகடற்படை தாக்குதல் நடத்தி உள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,
தமிழக கடற்றொழிலாளர்கள் மீது தாக்குதல்
இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி தோல்வி அடைந்ததால் தமிழககடற்றொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.
மேலும் இந்த விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் வாய் மூடி உள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.
அதிக அளவிலான தாக்குதல்
கடந்த அதிமுக ஆட்சியில் தொடர்ந்து கேள்வி எழுப்பியதால் இலங்கை அரசு பயப்பட்டது என்றும் ஆனால், கடந்த ஒராண்டில் அதிக அளவிலான தாக்குதல் நடைபெற்று வருவதாகவும் ஜெயக்குமார் தெரிவித்தார்.
அண்மைக்காலமாக இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடிக்கும் செயற்பாடு அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் - காலை திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 நாள் முன்
