பாகிஸ்தானில் இந்து மந்திரி மீது தாக்குதல் : வெடித்த சர்ச்சை
பாகிஸ்தானில் (Pakistan) இந்து மந்திரி ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவமொன்று பாரிய அதிர்வலையை கிளப்பியுள்ளது.
பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் பிரிவு கட்சியை சேர்ந்த சிந்து மாகாணத்தில் மத விவகாரத்துறை மந்திரியாக பணியாற்றும் கேல் தாஸ் கோஹிஸ்தானி (Kheal Das Kohistani) என்பவர் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த மந்திரி தாட்டா என்ற பகுதியில் வாகனத்தில் சென்று கொண்டிருந்த போதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
எதிராக போராட்டம்
இதன்போது, பாகிஸ்தான் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் அவருடைய காரின் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தக்காளி மற்றும் உருளைக்கிழங்கு உள்ளிட்டவற்றை கார் மீது வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதில் மந்திரிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து இருக்கும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மந்திரி மீதான தாக்குதல் ஏற்றுக் கொள்ள முடியாதது என சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
