இரத்தினபுரியில் தாக்கப்பட்ட பெருந்தோட்ட தொழிலாளர்கள்: மனோ கணேசன் விசனம்
இரத்தினபுரியில் தோட்டப் பகுதியொன்றில் பெருந்தோட்ட தொழிலாளர் ஒருவரும் அவரது மனைவியும் தாக்கப்பட்டமை தொடர்பில் அதிபர் ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) மற்றும் பிரதமர் உள்ளிட்ட தரப்பினருக்கு அறியப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்(Mano Ganesan) தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி - தும்பறை 82ஆம் பிரிவு தோட்டப் பகுதியில் பெருந்தோட்ட தொழிலாளர் ஒருவரும் அவரது மனைவியும் அந்த தோட்டத்தின் பிரதி முகாமையாளரால் தாக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் மற்றும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் வடிவேல் சுரேஷ் ஆகியோர் இன்று(10) சென்றுள்ளனர்.
மக்களின் பிரச்சினை
இதன்போது ஊடகங்களுக்கு கருத்துரைத்த தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் பெருந்தோட்ட மக்களின் பிரச்சினையில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இரண்டு நாட்களுக்கு முன்னர், கிரியெல்ல காவல்துறை பிரிவுக்குட்பட்ட இரத்தினபுரி(Ratnapura) மாவட்டத்தில் உள்ள இங்கிரிய தும்பறை தோட்டத்தில் உள்ள தொழிலாளர்களின் லைன் அறைகளுக்குச் சென்ற சிலர் வேலைக்குச் செல்லாத பெண் ஒருவரை தாக்கியுள்ளனர்.
அதேவேளை, குறித்த பெண் தொழிலாளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
Raised today in @ParliamentLk
— Mano Ganesan (@ManoGanesan) May 9, 2024
The Plantation Companies (#RPC) in SriLanka are using private battalions consisting of retired SLArmy officers and local goons. The rise of this type of private military is a blunt violation of law and order and is creating chaos in the plantations.… pic.twitter.com/CUXRAZUubm
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |