யாழில் காவல்துறையினரால் ஏற்பட்ட விபத்து: ஒருவர் பலி
யாழ்ப்பாணம்(Jaffna) மற்றும் புன்னாலைக்கட்டுவனில் காவல்துறையினர் விரட்டிச் சென்ற நபரொருவர் மின்கம்பத்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது இன்று(10) இரவு இடம்பெற்றுள்ளது.
அத்தோடு, அப்பகுதியில் பொதுமக்கள் கூடியதால் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காவல் உத்தியோகத்தர்கள்
பலாலி காவல் நிலையத்தில் கடமையாற்றும் காவல் உத்தியோகத்தர்கள் மோட்டார் சைக்கிளில் சென்ற நபரை மறித்துள்ளனர்.

இதன்போது, குறித்த நபர் தொடர்ந்து பயணிக்கவே விரட்டி சென்ற காவல் உத்தியோகத்தர்கள் அந்த நபர் பயணித்த மோட்டார் வண்டியை உதைத்து விழுத்தியதில் அந்த நபர் மின்கம்பத்தில் மோதி உயிரிழந்தார் என பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பாக சுன்னாகம் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சிறிலங்கா சுதந்திர தினத்தில் தமிழரின் நெஞ்சை உருக்கும் போராட்டம்… 22 மணி நேரம் முன்