இலங்கையில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள இந்திய கடற்றொழிலாளர்கள்...! வெடிக்கவுள்ள போராட்டம்
இலங்கை சிறையிலுள்ள கடற்றொழிலாளர்களையும் படகுகளையும் உடனடியாக விடுதலை செய்யக் கோரி ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர்.
குறித்த போராட்டத்தை ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு கடற்றொழிலாளர்கள் முன்னெடுக்கவுள்ளனர்.
இந்தியா தமிழ்நாடு ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க சென்று இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள இந்திய கடற்றொழிலாளர்களுக்கு ஆதரவாகவே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
கடற்றொழிலாளர்கள்
இதனடிப்படையில் எதிர்வரும் 30 ஆம் திகதி போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் செப்டம்பர் முதலாம் திகதியிலிருந்து தங்கச்சிமடத்தில் இதே கோரிக்கையை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரத போராட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தின் முக்கிய கோரிக்கைகளாக முந்தைய ஆட்சியில் வழங்கிய நிவாரணத் தொகை போல இந்த ஆட்சியிலும் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்றும் 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள இலங்கை இந்திய கடற்றொழிலாளர்கள் பேச்சுவார்த்தையை நடாத்த வேண்டும் என்பவையும் முன்வைக்கப்பட்டுள்ளன.
ராமேஸ்வரம் விசைப்படகு கடற்றொழில் சங்கப் பிரதிநிதிகள் நடத்திய அவசர ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |