முல்லைத்தீவில்முறைகேடாக பயன்படுத்தப்பட்ட அரச வாகனங்கள்: தாக்கப்பட்ட ஐபிசி தமிழின் பிராந்திய செய்தியாளர்

Sonnalum Kuttram
By Independent Writer Apr 08, 2026 11:41 AM GMT
Report
Courtesy: Thavaseelan

முல்லைத்தீவு மாவட்ட வன வள திணைக்கள அதிகாரி ஒருவர் உள்ளிட்ட குழுவினர், அரச வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்தி மது அருந்தியதோடு, சம்பவ இடத்திற்கு வந்த ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் அவர்களைத் தாக்க முயன்றதோடு,"இடம் தெரியாமல் மோதுகிறாய்" என மிரட்டல் விடுத்த சம்பவம் பனிக்கன்குளம் பகுதியில் நேற்றிரவு (07.04.2026) இடம்பெற்றுள்ளது.

மேலும் தெரியவருவதாவது,

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராமத்தில் அமைந்துள்ள மாங்குளம் வட்டார வன வள திணைக்கள அலுவலகத்தில் பணியாற்றும் ஒரு அதிகாரியின் வீட்டில், கடந்த 07.04.2026 இரவு 7 மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட வன அதிகாரி உள்ளிட்ட சிலர் WP PD 3060 இலக்கமுடைய நீல நிற கப் வாகனத்திலும், மேலும் சில வன ஊழியர்கள் WP PF 9868 இலக்கமுடைய வாகனத்திலும் வருகை தந்து மது விருந்தில் ஈடுபட்டுள்ளனர்.


அமெரிக்காவிடம் இருந்து 129 தொன் தங்கத்தை மீட்ட பிரான்ஸ்

அமெரிக்காவிடம் இருந்து 129 தொன் தங்கத்தை மீட்ட பிரான்ஸ்

சட்டவிரோத மணல் அகழ்வு

இப்பகுதியில் வன வள திணைக்கள அதிகாரிகளின் ஆதரவுடன் சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் காடழிப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகவும், இவற்றுக்காக அதிகாரிகள் இலஞ்சம் பெற்றுக்கொள்வதாகவும், சட்டவிரோத மணல் மாபியாக்கள் மற்றும் மரக்கடத்தல் கும்பல்களால் இத்தகைய மது விருந்துகள் ஏற்பாடு செய்யப்படுவதாகவும் தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இவ்வாறான ஒரு சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது.

மது விருந்துக்காக அரச வாகனங்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில், பனிக்கன்குளம் சந்தி பகுதியில் குறித்த இரு வாகனங்களும் சுமார் 3½ மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

முல்லைத்தீவில்முறைகேடாக பயன்படுத்தப்பட்ட அரச வாகனங்கள்: தாக்கப்பட்ட ஐபிசி தமிழின் பிராந்திய செய்தியாளர் | Attack On Journalist In Mullaitivu

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் சென்றபோது, மதுபோதையில் இருந்த மாவட்ட வன அதிகாரி உள்ளிட்ட குழுவினர் அவருடன் முரண்பட்டனர்.

மேலும், மாவட்ட வன அதிகாரி ஊடகவியலாளரைத் தாக்க முயன்றதோடு, "இடம் தெரியாமல் மோதுகிறாய்" என மிரட்டல் விடுத்தார்.இச்சம்பவம் தொடர்பில் உடனடியாக மாங்குளம் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டதோடு, அரச வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்தி மது அருந்தியமை தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் வடமாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபருக்கும் ஊடகவியலாளரால் அறிவிக்கப்பட்டது.

எனினும், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வர தாமதித்த நிலையில், வன அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மாங்குளம் காவல்துறையினர், ஊடகவியலாளரை காவல் நிலையம் வந்து முறைப்பாடு பதிவு செய்யுமாறு கூறியுள்ளனர்.

அதன்படி ஊடகவியலாளர் காவல் நிலையம் சென்றபோது, WP PF 9868 வாகனத்தில் வந்த வன வள திணைக்கள அதிகாரிகள் ஏற்கனவே காவல் நிலையம் சென்று ஊடகவியலாளருக்கு எதிராக முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்திருந்தனர்.

ஈரானியர்கள் தொடர்பில் ட்ரம்ப் கூறிய இரகசியம் : போட்டுடைத்த அமெரிக்க துணை ஜனாதிபதி

ஈரானியர்கள் தொடர்பில் ட்ரம்ப் கூறிய இரகசியம் : போட்டுடைத்த அமெரிக்க துணை ஜனாதிபதி

ஊடகவியலாளர் மீது மிரட்டல்

அப்போது, மாங்குளம் காவல் நிலைய பதவி நிலை அதிகாரி ஒருவர், வன அதிகாரிகளிடம் எதுவும் பேசாமல் ஊடகவியலாளரை மட்டும் அழைத்து, கடும் தொனியில் மிரட்டும் வகையில், "தேவையில்லாமல் பிரச்சினைகள் போடக்கூடாது.

முல்லைத்தீவில்முறைகேடாக பயன்படுத்தப்பட்ட அரச வாகனங்கள்: தாக்கப்பட்ட ஐபிசி தமிழின் பிராந்திய செய்தியாளர் | Attack On Journalist In Mullaitivu

ஊடகவியலாளர் என்றால் எதுவும் செய்வீர்களா? எனக் கூறியதோடு, தேவையற்ற வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தி அச்சுறுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும், "பிரச்சினை போட்டால் உமது ஊடக அடையாள அட்டையையும் இல்லாமல் செய்வேன்" என மிரட்டியுள்ளார்.

பின்னர் வேறு ஒரு காவல்துறை அதிகாரி முறைப்பாட்டைப் பதிவு செய்தபோது, ஊடகவியலாளர் மதுபோதையில் இருந்த அதிகாரிகளை பரிசோதனை செய்யுமாறு கோரியும், அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

அரச வாகனங்களைத் தவறாகப் பயன்படுத்தி மதுபோதையில் இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், ஊடகவியலாளர் மீது மிரட்டல் விடுத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சண்முகம் தவசீலன், "இவர்கள் அனைவரும் இணைந்தே சட்டவிரோத தொழில் நடவடிக்கைகளுக்கு துணை போகின்றனர் என்பதற்கான சான்று இது" எனக் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதனிடையே, குறித்த சம்பவம் தொடர்பில் மாவட்ட செயலாளர், மனித உரிமைகள் ஆணைக்குழு, காவல்துறை ஆணைக்குழு உள்ளிட்ட தரப்புகளிடம் முறைப்பாடு செய்யவுள்ளதாக ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், இன்று (08.04.2026) நண்பகல் 12 மணிக்கு இரு தரப்பினரும் விசாரணைக்காக மாங்குளம் காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.  

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025