சவுதியில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்-இலங்கையர் உட்பட 12 பேர் படுகாயம்
சவுதி அரேபியாவில் விமான நிலையமொன்றை இலக்கு வைத்து ஏமன் கிளர்ச்சியாளர்கள் நடத்திய ட்ரோன் தாக்குதலில் இலங்கையர் உட்பட 12 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சவுதி அரேபியாவின், தெற்கு ஏமன் எல்லைக்கு அருகில் உள்ள அபா (Abha) விமான நிலையத்தை இலக்கு வைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அத்துடன் சவுதி அரேபிய பிரஜைகள் உட்பட, இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் காயமடைந்தவர்களில் அடங்குகின்றனர்.
தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாக கூறியுள்ள ஏமன் கிளர்ச்சியாளர்கள், சவுதி இராணுவ நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்ட விமான நிலையத்தை குறி வைத்ததாகவும், பொதுமக்கள் அத்தகைய தளங்களில் இருந்து விலகி இருக்குமாறும் எச்சரித்துள்ளனர்.
இதேவேளை இது பயங்கரவாத தாக்குதல் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சலிவன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
