உதயன் பத்திரிகை தலைமையகத்துக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்ட 6 பேருக்கு விளக்கமறியல்

Jaffna Journalists In Sri Lanka
By Vanan Apr 10, 2023 01:09 PM GMT
Report

உதயன் பத்திரிகை தலைமையகத்துக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்ட மதக் குழுவைச் சேர்ந்த 6 பேர் யாழ்ப்பாணம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்று (10) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டது.

30 பேர் கொண்ட குழு

உதயன் பத்திரிகை தலைமையகத்துக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்ட 6 பேருக்கு விளக்கமறியல் | Attack Uthayan Jaffna 6 Peoples Arrest

அச்சுவேலிப் பகுதியில் உள்ள “அசெம்பிளி ஒவ் ஜீவவார்த்தை” என்ற கிறிஸ்தவ சபை ஒன்றின் போதகர் உட்பட 30 பேர் கொண்ட குழு ஒன்று நேற்று யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் உள்ள உதயன் பத்திரிகை தலைமையகத்துக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்டது.

கிறிஸ்தவ சபையின் போதகர் உட்பட மூவர் கடந்த வெள்ளிக்கிழமை வீடொன்றுக்குள் புகுந்து அங்கிருந்த பெண்களைத் தாக்கி அச்சுறுத்தியமை தொடர்பில் அச்சுவேலி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுப் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

அது தொடர்பான செய்தியை வெளியிட்டமைக்காகவே போதகரும் குழுவினரும் உதயன் தலைமையகத்துக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்டனர்.

உதயன் ஆசிரியர் பீடப் பணியாளர்களைச் சூழ்ந்து அச்சுறுத்தி தாக்க முயன்றதுடன், உதயன் பணியகத்துக்குள் பணியில் இருந்தவர்களை காணொலி பதிவு செய்து அச்சுறுத்தியதுடன், அக்குழு அநாகரிகமாக நடந்து கொண்டதா தெரிவிக்கப்படுகிறது.

அத்தோடு செய்தியை வழங்கியவர்களை இனங்காட்ட வேண்டும் என்றும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

விசாரணை

இது தொடர்பாக யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இன்று அதிகாலை 3 மணியளவில் சம்பவத்துடன் தொடர்புடைய போதகர் மற்றும் மற்றொருவர் யாழ்ப்பாணம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

இன்று காலை இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டபோது, அவர்களை எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டது.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையோரை கைது செய்யும் நடவடிக்கைகள் யாழ்ப்பாணம் காவல்துறையினரால் முன்னெடுக்கப்படுகின்றன.

ஏனையோரும் கைது செய்யப்பட்டு விரைவில் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
நன்றி நவிலல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, London, United Kingdom

15 May, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023