ஈரான் மீதான தாக்குதல் : நாள்தோறும் ட்ரம்பை நச்சரிக்கும் நெதன்யாகு
ஈரான் மீதான இராணுவத் தாக்குதலை மீண்டும் தொடங்குமாறு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை தினமும் தொலைபேசியில் தொடர்புகொண்டு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அழுத்தம் கொடுத்து வருவதாக Financial Times செய்தி வெளியிட்டுள்ளது.
அதேவேளையில், வெள்ளை மாளிகை அதிகாரிகளும், பிராந்தியத் தலைவர்களும் பதற்றத்தைத் தவிர்த்து பேச்சுவார்த்தைகளுக்கு முன்னுரிமை அளிக்குமாறு ட்ரம்பை வலியுறுத்தி வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளின் கோரிக்கை
Financial Times பத்திரிகையின்படி, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், துருக்கி மற்றும் கத்தார் ஆகிய நாடுகளின் தலைவர்கள் கடந்த சில நாட்களாக ட்ரம்பை தொடர்புகொண்டு, கிட்டத்தட்ட ஒன்பது மாதங்களாக நீடித்து வரும் போரை ராஜதந்திர வழியில் முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்தியுள்ளனர்.

தற்போதைக்கு ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை வோஷிங்டன் மீண்டும் தொடங்குவதற்கு வாய்ப்பில்லை என ட்ரம்ப் தெரிவித்துள்ள நிலையில், இந்த செய்தி வெளியாகி உள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |