இராஜாங்க அமைச்சரின் வீட்டின் மீது தாக்குதல்
Sri Lanka Podujana Peramuna
Prasanna Ranatunga
By Sumithiran
கோனவில, பமுனுவில சரத்சந்திர டயஸ் மாவத்தையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் வீட்டின் மீது இனந்தெரியாத குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கம்பகா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் இரண்டு மாடி வீட்டை இனந்தெரியாத குழு தாக்கி சேதப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டில் எவருமில்லை
தாக்குதலில் வீட்டின் எட்டு ஜன்னல்கள் சேதமடைந்துள்ளதாக சபுகஸ்கந்த காவல்துறையினர் தெரிவித்தனர்.
தாக்குதலின் போது வீட்டில் யாரும் இல்லாத நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய சபுகஸ்கந்த காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சிசிடிவி காட்சிகளை கண்காணிக்க
சந்தேகநபர்களை அடையாளம் காண்பதற்காக வீட்டுக்கு அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சபுகஸ்கந்த காவல்துறையினர் தெரிவித்தனர்.
