தெற்கில் மீண்டும் இனவாதத்தை தூண்ட முயற்சி : யாழில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கவலை

Sri Lanka Police Jaffna Ananda Wijepala
By Theepan Jun 14, 2026 04:02 PM GMT
Report

வடக்கில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை கடந்த காலங்களில்எடுத்தோம். இதனால் , வடக்கில் பல சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்தி உள்ளோம் இந்த நாட்டில் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து சட்டவாட்சியை நடைமுறைப்படுத்த ஒத்துழைத்து வருகின்றனர்.

வடக்கு கிழக்கு தெற்கு மேற்கு என்ற எந்த பாகுபாடுகள் இன்றி அனைத்து மக்களுக்கும் ஒரே சட்டமே நடைமுறையில் உள்ளது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

தெற்கு அரசியல்வாதிகள் இனவாதத்தை தூண்ட முயற்சி 

கோப்பாய் காவல் நிலையத்தை திறந்துவைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,

தெற்கில் மீண்டும் இனவாதத்தை தூண்ட முயற்சி : யாழில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கவலை | Attempt To Rekindle Racism In The South

தெற்கு அரசியல்வாதிகள், மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காக இனங்களுக்கு இடையில் குரோதத்தை ஏற்படுத்தும் விதமாக கருத்துக்களை தெரிவிக்கின்றனர் . ஆனால் நாட்டில் மீண்டும் இனவாதம் தலை தூக்க நாம் அனுமதிக்க மாட்டோம்

வடக்கு பகுதியில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி மக்களை சந்தோஷமாக சுதந்திரமாக வாழ வைப்போம். எளியோருக்கு ஒரு நீதியும் பிரபலமானவர்களுக்கு ஒரு நீதியும் என இந்த நாட்டில் இல்லை. அனைவருக்கும் பொதுவான நீதியே உண்டு.

அனைவருக்கும் சட்டம் சமம் 

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு என்ற வகையில் அனைவருக்கும் சட்டம் சமம் என்பதையும் , காவல்துறையினர் பாரபட்சம் இன்றி சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என பணித்துள்ளோம்.

தெற்கில் மீண்டும் இனவாதத்தை தூண்ட முயற்சி : யாழில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கவலை | Attempt To Rekindle Racism In The South

கட்சி, ஜாதி, இனம் மதம் என்ற எந்த வேறுபாடுகளும் இன்றி, அனைவரும் ஒரே இனம் என்ற சூழலை உருவாக்க வேண்டும். இந்த நாட்டில் மீண்டும் இனங்களுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்படமாட்டாது

இந்த பிரதேசத்தில் வாழும் உங்கள் பிள்ளைகள், உங்களின் எதிர்கால சந்ததியினர் இந்த நாட்டில் சந்தோசமாக ஒற்றுமையாக வாழ வேண்டும் அவ்வாறான சூழல் உருவாக வேண்டும். பிரிவினைவாதம் வேறுபாடுகள் தலைதூக்க அனுமதிக்க கூடாது. அவ்வாறான நிலை எதிர்கால சந்ததியினருக்கு ஏற்பட கூடாது.எமது பிரதான நோக்கம் எதிர்கால சந்ததியின் ஒற்றுமையான வாழ்வே. அதற்கு காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்

ரெலோவின் தலைவராக மீண்டும் செல்வம் அடைக்கலநாதன்!

ரெலோவின் தலைவராக மீண்டும் செல்வம் அடைக்கலநாதன்!

காவல்துறைக்கு கிடைக்கும் உயரிய விருது

 காவல் நிலையங்களில் முறைப்பாடுகளுக்கு தீர்வு கிடைக்கா விடின், உயர் காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவியுங்கள். அல்லது காவல்துறை மா அதிபருக்கு சொல்லுங்கள்.தமக்கான நீதியினை பெற்றுக்கொள்ள அனைவருக்கும் உரிமை உண்டு காவல்துறைக்கு கிடைக்கும் உயரிய விருது , மக்களால் வழங்கப்படும் விருதாகும்.

தெற்கில் மீண்டும் இனவாதத்தை தூண்ட முயற்சி : யாழில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கவலை | Attempt To Rekindle Racism In The South

எனவே மக்களின் நன்மதிப்பை காவல்துறையினர் பெற வேண்டும். அவ்வாறு நன்மதிப்பை பெற்றுக்கொள்வதே காவல்துறைக்கு கிடைக்கும் உயரிய விருதாகும்.

வடக்கில் மொழி பிரச்சனை இன்றி சேவைகளை பெற நடவடிக்கை எடுத்துள்ளோம். அதேபோன்று வடக்கில் உள்ள மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் , வடக்கில் சிறப்பான சேவையை மேலும் மேம்படுத்தவும் , வடக்கில் உள்ள இளையோரும் காவல்துறை சேவைகளில் தாமாக முன்வந்து இணைய வேண்டும் என மேலும் தெரிவித்தார்.    

விசாரணைக்கு அழைக்கப்படவுள்ள சக்திவாய்ந்த அரசியல்வாதிகள் : கொழும்பில் பரபரப்பு

விசாரணைக்கு அழைக்கப்படவுள்ள சக்திவாய்ந்த அரசியல்வாதிகள் : கொழும்பில் பரபரப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020